இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் ராமேஷ்வர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த நாட்களாகத்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என அவர்கள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இந்த 3 விசைப்படகுகள், அவற்றில் இருந்த 22 மீனவர்களை சிறைப்பிடித்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.