கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதன்படி, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் அபேகோன், மாயாதுன்னே கோரயா மற்றும் சமத் மொராயஸ் ஆகிய ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இந்த வழக்கு இன்று எடுத்துகொள்ளப்பட நிலையில் செப்டம்பர் 25-ம் திகதி விசாரிப்பதாக நீதிபதிகள் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.