வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று இரண்டு தனியார் பேருந்துக்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இதில் 11 பேர் காயமடைந்த நிலையில், வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை அம்பகஸ்தோவ வீதியின் தரகல பகுதியில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றைய பேருந்தை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.