இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் போட்டியிட்டிருந்தார்.
மேலும் அவர் பொதுத் தேர்தலில் அவர் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.