யாழ்.குறிகட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த படகில் நான்கு பேர் பயணித்துள்ள நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படகில் இருந்த 3 பேர், நீரில் நீந்தி உயிர் தப்பியுள்ள நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உயிர்பிழைத்த மூவரும் தற்போது யாழ் போதனாவைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.