குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்பில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 29ஆம் திகதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, ஜூலை 29ஆம் திகதி விசாரணைக்காக நிர்ணயித்துள்ளார்.