லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கண்டி பால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்தி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி பால்கன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.
ஜப்னா கிங்ஸ் அணிக்காக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.
இதனால் ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.