அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் பைடனால் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதன்காரணமாக அமெரிக்க தேர்தல் களமானது தற்போது மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடத் தேர்வான முதல் கறுப்பின, முதல் ஆசிய வம்சாவழிப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
அத்துடன் கமலா ஹாரிஸின் தாயார் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.