சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி இந்திய அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.