”ரணில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருகின்றார்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச சத்தியவாதி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் இந்தக் காலத்தில் மக்களுக்காக கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தனிநபர் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதல் முதலில் சமர்ப்பித்துள்ளது எனவும் சஜித் பிரேம தாச தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் தற்போதைய உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு உல்லாசங்களை அனுபவித்து வருவதாகவும், அவர் நாட்டின் தற்காலிக பாதுகாவலரே அன்றி நாட்டின் சொந்தக்காரர் அல்லர் என்று இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஊழலில் ஈடுபட்டவர்களிடமே நாட்டை மீண்டும் கையளிக்காமல் சரியான தீர்க்கமான முடிவை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.