ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு சில பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தங்களினால் அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் டிபால் பெரேரா தெரிவித்துள்ளார்
எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் அழுத்தங்களினால் வயிற்றுவலி, வாந்தி, தலைவலி, சரியான உடல் உழைப்பு இல்லாமை போன்ற பல உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக நிபுணர் வைத்தியர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வைத்தியசாலையிலிருந்தும் பல நோய்வாய்ப்பட்ட பிள்ளைகள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் மன நிலையை பாதிக்காமல் அவர்களின் கல்விக்கு ஆதரவாக பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளை சுதந்திரமாக படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர்களிடம் மருத்துவர் கேட்க்கொண்டுள்ளார்