மும்பையில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் (IIFA) ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிவூட் நடிகர் ஷாருக்கான் புதிய தோற்றத்தில் வெளிப்பட்டார்.
அண்மைக்காலமாக நீண்ட ஹேர் ஸ்டைலில் காணப்பட்ட ஷாருக்கான், தற்போது ஷோர்ட் ஹேர் ஸ்டைலுக்கு திரும்பியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தவகையில் அவரது புதிய தோற்றம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2023 இல் வெளியான அவரது பிளாக்பஸ்டர் படமான பதான் படத்திற்காக அவர் நீண்ட கூந்தலை பராமரித்து வந்தார்.
அவரது அண்மைய பொதுத் தோற்றங்களில், குறிப்பாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழாவில் அவரது நீண்ட கூந்தல் ஒரு அடையாளமாக மாறியிருந்தது.
இதேவேளை, 2024 இந்திய திரைப்பட அகாடமி விருதுகள், செப்டம்பர் 27 முதல் 29 வரை அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.