”மக்களின் நெருக்கடியை அறிந்தவர் அனுரகுமார திசாநாயக்க மாத்திரமே” என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 22 ஆம் திகதி இந்த நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
38 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களில் இன்று முன்னிலையில் உள்ளவர் யார் என்பதை அனைவரும் அறிவர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அநுரகுமாரவை தவிர அனைவரும் மக்களின் நெருக்கடியை அறியாதவர்கள்.தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சிறந்த ஒரு கொள்கை திட்டத்தினை முன்வைத்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பாக அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் மக்கள் நீண்டகாலமாக தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வினை எதிர்ப்பார்த்துள்ளனர். நாட்டின் ஏனைய பகுதிகளை போன்று பொருளாதார சுகாதார கல்வி ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
யுத்தத்தில் பலவித சிக்கல்களை எதிர்கொண்டனர். எமது ஆட்சியில் நாம் இனமத பேதமின்றி பிரச்சினைகளுக்க தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.
நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கூட்டணிஅமைக்கமாட்டோம்”இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.