தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை புகையிரத நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவைகளுக்காக புகையிரதம் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர புகையிரதம் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.