தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த சந்திப்பானது இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை – இந்திய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது
முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்
இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போதுஇந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள்குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இந்திய இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது