எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி தெரிவித்துள்ளார்
அத்துடன் எல்பிட்டிய உள்ளுராட்சி சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7.00 முதல் 48 மையங்களில் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்
அதன்படி இன்று காலை 10.30 மணி நிலவரம்படி சுமார் 30% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் 4 மணிக்குப் பின்னர் வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 55,643 ஆகும். என்றும் அவர் குறிப்பிட்டார்