சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
அமைச்சின் எந்தவொரு அதிகாரியும் தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி இதுபோன்ற பணத்தை சேகரிக்கும் அல்லது கோரும் செயலில் ஈடுபட மாட்டார்கள்.
இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சு, வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், இவ்வாறாறு மோசடி செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.