ஒலி மாசடைவைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ஆட்சியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆர்டி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு இருப்பதாக புகார் எழுந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் ஹோரன் பயன்படுத்தக் கூடாது எனவும், அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது எனவும், இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது எனவும் எனவும் உத்தரவிட்டுள்ளது.