“இந்தியாவின் மீதும் இந்தியப் பிரதமர் மோடி மீதும் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இதனைத் தெரிவித்த அவர், இந்தியர்களிடம் அதிக பணம் இருப்பதாகவும், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியா உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும் எனவும், அவர்கள் அதிகமாக வரி விதிப்பதால் தாம் அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், எனினும் இந்தியா மற்றும் பிரதமர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்தி வைக்க எலோன் மஸ்க் தலைமையிலான DOGE குழு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.