• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் –  ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/25
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆயுதங்களின் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித நாகரீகத்தின் மதிப்புகளுடன் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை அணுகவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

இதேவேளை ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபாயகரமானது எனவும் அதற்கு எதிராக போராடாமல் இருப்பது அதனை விடவும் அபாயகரமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை முறையினை உறுதிசெய்வதே தமது முதன்மை கனவாகும் எனவும் ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது ” போதைப்பொருள் மற்றும் அதற்கான சந்தை இன்று உலகளாவிய ரீதியில் பல பிரைச்சினைகளை உருவாக்கி வருகின்றது. போதைப்பொருள் வர்த்தகம், நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு அவை உலகளாவிய அரசியலுக்கும் சுகாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதேவேளை, உலகளாவிய நன்நடத்தைக்கும் அது அச்சுறுத்தலாக அமைக்கின்றது. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு நான் உங்கள் அனைவரையும் உலகளாவிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக இருப்பதோடு அது ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படுகின்றது என்பதை நாம் நம்புகின்றோம்.

அத்துடன், ஊழல், வறுமைக்கும் வழிவகுக்கின்றது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஆபத்தான ஒரு விடயமாக இருந்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் அதனை விட ஆபத்தானது. மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனம் மனித இனத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும்.

மனித நாகரிகத்தின் வெற்றிகள், ஓரிரவில் நடப்பது அல்ல. அவை பல்வேறு தியாகங்களின் விளைவுகள் ஆகும். அதேபோல, ஊழலுக்கு எதிரான முதலாவது படி கடினமாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து 1,000 இலகுவான படிகள் வரும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். நான் 22 மில்லியன் மக்களை கொண்ட ஒரு தீவை பிரதிநித்துவப்படுத்துகின்றேன்.

blank

எமது நாட்டின் சனத்தொகை உலகின் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது 0.3 சதவீதமே ஆகும். நாங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளோம். இதேவேளை, நாம் உலகளாவிய ரீதியில் நடைபெறும் யுத்தங்களை கண்டிக்கின்றோம். அதில் நீங்கள் அனைவரும் இணைந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

எந்த நாடும் போரை விரும்புவதில்லை. உலகில் எங்கு போர் நடந்தாலும் போரின் விளைவு துயரம் ஆகும். 3 தசாப்த போரை எதிர்கொண்ட நாடாக போரின் துயரத்தை நாம் நன்கு அறிவோம். போரால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோரின் பெற்றோர், மனைவிமார் மற்றும் குழந்தைகள் இன்னொரு போரை விரும்ப மாட்டார்கள்.

ஒரு சிறந்த ஆட்சியாளர் உயிர்களை காப்பற்றுவாரே அன்றி அவர் ஒருபோதும் உயிர்களை அழிப்பதற்கு எண்ண மாட்டார். பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கின்றோம் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

காசா இன்று குழந்தைகளினதும் அப்பாவி மக்களினதும் அழுகுரல் ஒலிக்கும் இடமாக மாறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் உரிய தரப்பினரும் போர்நிறுத்ததை ஏற்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதோடு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் வழங்க வேண்டும். மதவாதமும் இனவாதமும் போரை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.

மில்லியன் கணக்கான குழந்தைகள் உலகில் பசியால் இறக்கும் அதேவேளை நாம் ஆயுதங்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழித்து வருகின்றோம். மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு பொருளாதார காரணங்களால் கல்வி நிராகரிக்கப்படும் அதேவேளை, பில்லியன் கணக்கான பணம் இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய செலவிடப்படுகின்றது.

3 தசாப்த போருக்கு முகங்கொடுத்த எமக்கு அதற்கு எதிராக குரல் கொடுக்க உரிமை உள்ளது. இதேவேளை, எனது நாடு தொடர்பாக எனக்கு சில கனவுகள் இருப்பதோடு உங்கள் அனைவரின் நாடுகள் தொடர்பாக உங்களுக்கும் சில கனவுகள் இருக்கும். எனது நாட்டு மக்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதே எனது கனவாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Anura Kumara DisanayakaSri Lankan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

Next Post

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

Related Posts

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!
இலங்கை

2026-04-22
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!
JUST IN

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
இலங்கை

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

2026-04-22
Next Post
மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

மார்பகப் புற்றுநோய் குறித்து எச்சரிக்கை!

முப்படைகளுக்கு அழைப்பு; வர்த்தமானி வெளியீடு!

விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

0
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

0
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

0
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

0
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

0
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

2026-04-22
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

2026-04-22
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

2026-04-22

Recent News

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

2026-04-22
முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

2026-04-22
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

2026-04-22
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.