தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 69-வது மற்றும் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (03) மாலை 6.45 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன் .
இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரசியல் மற்றும் அதிரடிப் பாணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் டிரெய்லரில், விஜய்யின் அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் பார்ப்பவரை அதிர வைக்கின்றன.
“மக்களுக்கான தலைவன்” என்ற தொனியில் விஜய்யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிரெய்லர் மூலம் அறியமுடிகிறது.
அண்மையில் ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தநிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இப் படம் எதிர்வரும் 09ஆம் திகதி வெளியாகவுள்ளது.




















