அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், ஓஹியோ மாகாணம் சின்சினாட்டியில் உள்ள வீட்டில், மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்துள்ள அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், சின்சினாட்டியில் உள்ள வீட்டுக்கு அருகே, மர்ம நபர் ஒருவர் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினர் எச்சரித்தனர்.
இதன்படி, உள்ளூர் பொலிஸார் அங்கு சென்றபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஒருவரைப் கைது செய்தனர்.
வான்சின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இதை பொலிஸார் உறுதி செய்யவில்லை.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில், வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தார் அந்த வீட்டில் இல்லை எனவும் வான்சின் வீட்டுக்குள் நுழையாமலேயே, வெளியில் இருந்து தாக்கப்பட்டதாகவும் யார், எதற்காக இந்த தாக்குதல் நடத்தினர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


















