அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி 24 வயதுடைய யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவில ்ஈடுபட்டிருந்த நபருடன் ஏற்பட்ட தகராறில் 24 வயதுடைய குறித்த யுவதி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் நேற்று அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் அங்குலானை, சயுருபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














