இலங்கையின் 17ஆவது தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் தற்போது ஆரம்பமானது.
கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் ஆரம்பமாகியது.
இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளுடன் இணைந்து பணியாற்றி, உயிர்நீத்த தமிழ் மற்றும் முஸ்லிம் படைவீரர்களின் உறவினர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
போரில் உயிர்நீத்த தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் வீரர்களைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 19 ஆம் திகதியை தேசிய வீரர்கள் நினைவு தினமாக அரசாங்கம் பிரகடனப்படுதியுள்ளது.
தாய்நாட்டிற்காக உயிர்நீத்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிகழ்வில் அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டுகளை விடவும் இம்முறை அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
















