• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 2400 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் 36 வருடங்களாக அடாத்தாக கையகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி பகுதியில் நேற்றையதினம் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கில் , விவசாயம் மற்றும் கடற்தொழில் என செழிப்பு மிக்க 19 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது

இதில் மூன்று கிராம சேவையாளர் பிரிவு முற்றாகவும் , ஏனைய 16 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியளவிலும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது

பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு மற்றும் மயிலிட்டி துறை தெற்கு ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டியுள்ளது

மயிலிட்டி வடக்கு , மயிலிட்டி துறை தெற்கு மற்றும் மயிலிட்டி துறை வடக்கு ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவை கொண்ட இலங்கையின் மீன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு மீன் உற்பத்தியை வழங்கிய மக்கள் இன்று அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு 36 வருடங்கள் கடந்தும் மீள் குடியேற்றப்படவில்லை .

இந்த மக்களை மீள் குடியேற்றுவோம் என கூறி மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இவர்களை மீள் குடியேற்றவில்லை.

மக்களின் காணி மக்களுக்கே என கூறி வந்த இந்த அரசாங்கம் , ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்ததும் பலாலி வீதியை நேர கட்டுப்பாட்டுடன் திறந்து விட்டதை தவிர வேறு எதனையும் செய்யவில்லை

பலாலி வீதியில் கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் , விமான நிலைய விஸ்தரிப்பிப்புக்கு என காணியை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர் .

உண்மையில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு பலாலி கிழக்கு பகுதி காணிகள் தேவையில்லை.

ஆட்சிக்கு வருவதற்காக மக்களிடம் , மக்களின் காணி மக்களுக்கு என கூறி ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்தும் , இதுவரையில் மக்கள் பொறுமையாக தமது காணிகளை விடுவிப்பார்கள் என காத்திருந்தார்கள். ஆனால் இன்னமும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை

அண்மையில் , காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் இப்பகுதிக்கு வந்திருந்த போது , காணிகள் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தவர்களை அழைக்கவில்லை.

சாக்கு போக்காக ஆளுநர் அலுவலகத்தில் கூட்டத்தினை நடாத்தி விட்டு, காணிகளை விடுவிப்போம் என கூறி சென்றுள்ளனர்

எனவே , மக்களை தொடர்ந்து ஏமாற்றாது , இப்பகுதி மக்களுக்கு சொந்தமான சுமார் 2400 ஏக்கர் காணிகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பகுதியில் அரச காணிகள் எதுவும் இல்லை. இவ்வளவும் மக்களுக்கு சொந்தமான உறுதி காணிகள். அவற்றில் தான் இராணுவம் தோட்டம் செய்தும் , கடைகளை நடாத்தியும் வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளனர். ஆனால் காணி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்படுகிறனர்

எனவே அநுர அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி , மக்களின் காணிகளை மக்களிடமே கையளிக்க வேண்டும் என்பதுடன் , மக்களின் வழிபாட்டு இடங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related

Tags: Jaffnaland issuesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

Next Post

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

Related Posts

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி
இலங்கை

பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

2026-08-27
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!
இலங்கை

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

2026-08-27
கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!
இலங்கை

கிரிகரி ஏரி அருகே குதிரைவண்டிப் போனிக்கு தாக்குதல் நடத்திய இளைஞர் கைது!

2026-08-27
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!

2026-08-27
யாழ், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள்!
இலங்கை

யாழ், ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள்!

2026-08-27
Next Post
கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

கந்தறை மீன்பிடித் துறைமுகத் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை: பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடி கள ஆய்வு!

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

பிரித்தானிய அரச குடும்பத்தில் ஆண்ட்ரூவின் ரகசிய மின்னஞ்சல்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே அரண்மனைக்குக் கிடைத்துள்ளமை அம்பலம்!

அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

அமெரிக்க காகித ஆலையில் பயங்கர வெடிப்பு! 9 பேர் பலி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

0
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

0
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

0
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

0
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

பொது ஒழுங்கைப் பராமரிப்பதற்காக முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

2026-08-27
நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்: வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.