• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்!

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபட 42 படகுகள் உள்ளதாகவும் , அவற்றினை தவிர வேற படகுகள் பக்தர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் , படகில் பயணிக்கும் அனைவரும் உயிர்காப்பு அங்கி அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் , அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அக் கலந்துரையாடலில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன அவையாவன ,

பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் – முதல் 10 நாள் வரை 25 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், இறுதி 5 நாட்களும் சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனவும், குறிகட்டுவானில் முதல் 10 நாள் வரை 5 பேரும் இறுதி 5 நாட்களில் மேலும்10 பேரும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

திருவிழாவிற்காக 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்ளவதுடன் இந்த 42 படகுகளை தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கை உட்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

படகோட்டிகள் மது பாவனையில் இருந்தால் படகும் அதன் ஓட்டுனரும் மூன்று மாதங்களுக்கு அப் படகினை ஓட்டுவதற்கு தடை விதித்தல் எனவும், இதற்கு படகு உரிமையாளர் சங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நயினாதீவு பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் – படகுகளில் பயணிக்கும் போது உயிர்காப்பு அங்கி அணியாது பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மதுபோதையில் படகுகள் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மக்கள் சமூக பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

05.படகுகளில் பக்தர்கள் உயிர்காப்பு அங்கிகள் அணியாது பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், பயன்படுத்தப்படும் உயர்காப்பு அங்கிகள் பாவணைக்கு உகந்தவையா எனவும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ், கடற்படை ஆகியோர் இணைந்து பரிசீலனை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

06.சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மற்றும் இறுதி இரு திருவிழாவிற்கும் யாழ்ப்பாண மாவட்ட சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

07.குறிகட்டுவானிலிருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 100.00 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நயினாதீவிலிருந்து காலை 6.00 மணிக்கும் குறிகட்டுவானிலிருந்து காலை 6.30 மணிக்கும் போக்குவரத்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

08.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

09.நயினாதீவுக்கு கட்டடப் பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது குறிகட்டுவானிலிருந்து பி. ப 4.00 மணிக்கு பின்னர் ஏற்றலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு முதல் 10 திருவிழாக்களுக்கும் ஒரு நாளுக்கு மூன்று பேரும் இறுதி ஐந்து திருவிழாக்களுக்கும் ஆறு பேருமாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

11.தனியார் மற்றும் அரச சேவை வீதிப்போக்குவரத்து சேவை கட்டணம் ரூபா 184.00 எனவும் தீர்மானிக்கப்பட்டது.

12.கோயில் கோபுரத்திற்கு முன்பக்கமாக தனியார் கடைகள், தாகசாந்தி நிலையம் அமைப்பதனை தவிர்க்குமாறு பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டது

மேலும், குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலகத்தினர், நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் , வேலணை பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள், கலந்து கொண்டிருந்தார்கள்.

blank blank

Related

Tags: Jaffnanainateevusrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க விழா தொடர்பான அப்டேட்!

Next Post

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

Related Posts

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!
இலங்கை

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

2026-07-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

2026-07-16
சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
Next Post
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.