• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும்,  சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது ஆதங்கங்களையும் கோரிக்கைகளையும் பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

blank

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை: ‘சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான,  எம்மை ஏமாற்றும் உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம்… சர்வதேச விசாரணையை கோருகின்றோம்…’ என முதன்மைப் பதாகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

‘போர் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த எங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆனது?’ மற்றும் இராணுவத்தை நம்பி சரணடைந்த பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்ட பதாகைகளை உறவினர்கள் கண்ணீருடன் ஏந்தியிருந்தனர்.

அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும், தங்களுக்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றும் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

நீண்ட காலமாகத் தொடரும் தங்களது நீதிக்கான போராட்டத்திற்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு தங்களுக்கு தகுந்த நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

blank

உள்ளக நீதிப்பொறிமுறைக்கு எதிர்ப்பு: சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும் தங்களுக்குத் தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்தனர்.

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டுமாயின் தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தின் போது காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச விசாரனை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related

Tags: international investigationjustice systemmilitarytruthwar in Sri Lanka.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

Next Post

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Related Posts

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!
இலங்கை

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

2026-08-17
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 
இலங்கை

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-17
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
Next Post
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

இலங்கையுடனான முதல் டெஸ்ட்டில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

0
பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

0
நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

0
ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

0
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.