கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிவேக ரயிலின் உணவகத்தினுள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த மோசடி ஒன்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் (09) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, ரூ. 120.00 என குறிக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்று ரூ. 150.00 இற்கு விற்பனை செய்யப்பட்டு நுகர்வோர் சுரண்டப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை (வழக்குத் தொடர) எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் உணவகங்களில் இவ்வாறு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் ரயில்வே திணைக்களத்திற்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் புகையிரத பெட்டி உணவகங்களில் மாத்திரம் இவ்வாறான 4 சுற்றிவளைப்புகளை எமது அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.












