யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழாய்வு பணிகள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.
இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 434 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இன்று 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது. கடந்த ஆண்டு இடம்பெற்ற 2ஆம் கட்ட அகழாய்விலும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி மனித புதைகுழி அகழாய்வில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.














