இளையோர் வேலையின்மைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், பிரபல ‘Sainsbury’’ நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு 10,000 வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது எனப் பிரதமர் ஆன்டி பேர்னாம் (Andy Burnham) தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள சென்சுபரிஸ் (Sainsbury) கிளைக்குச் சென்று புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்த அவர், கல்வி முறையைச் சீரமைப்பதுடன், மாணவர்களுக்குத் தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்குவதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இளம் சமுதாயத்தினருக்கு உரிய வேலைவாய்ப்பு அனுபவங்களை வழங்கப் பெரு நிறுவனங்கள் அனைத்தும் முன்வர வேண்டுமெனவும் ஆன்டி பேர்னாம் (Andy Burnham) பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.













