ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4 ஆவது இருபதுக்கு 20 (T20I) கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் தற்போது 2 – 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி , முதலில் களத்தடுப்பை (Bowling) தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மற்றும் அணியின் தலைவரான ஷாய் ஹோப் (Shai Hope) மிகச்சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
248 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 56 ஓட்டங்கள் (6 நான்கு ஓட்டங்கள் , 4 ஆறு ஓட்டங்கள்) விளாசினார்.
இறுதி கட்டத்தில் திலக் வர்மா (43 ஓட்டங்கள்), நிதிஷ் குமார் ரெட்டி (41 ஓட்டங்கள்) போராடிய போதிலும், இந்திய அணியால் வெற்றியைப் பெற முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கக் கூடிய இறுதி மற்றும் 5 ஆவது இருபதுக்கு 20 போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

















