• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆப்கானில் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் உள்ளன!

Anoj by Anoj
2021/10/12
in ஆசியா, உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐ.எஸ்.கே. கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.கே. அமைப்பு குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல இந்த அமைப்புதான் ஒகஸ்ட் மாதம் உலக நாடுகள் பல ஆப்கானிஸ்தானை விட்டு அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் மோசமான தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியது.

ஈராக்கில் இராக்கில் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னர் திடீர் எழுச்சி பெற்ற ஐஎஸ் (இஸ்லாமிய தேசம்) பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவுதான் ஐஎஸ்கே. ஐஎஸ்-கோராசான் மாகாணம் என்பதன் சுருக்கமே ஐஎஸ்கே.

கோராசான் பிராந்தியமானது இந்த இயக்கத்தின் பார்வையில் ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.

ஈராக், சிரியாவில் ஐஎஸ் இயக்கம் வலுவாக இருந்தபோது 2015ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கிளையாகத் தொடங்கப்பட்டது ஐஎஸ்கே.

ஐஎஸ் போலவே பரந்த இஸ்லாமிய தேசத்தை மத்திய மற்றும் தெற்காசியாவிலும் கட்டமைக்க வேண்டும் என்பதுதான் ஐஎஸ்கேயின் நோக்கமும்.

ஆப்கான்- பாகிஸ்தான் எல்லையில் உள்ள நங்கர்கர் மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது.
தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஆப்கானிஸ்தானின் வடக்கு, வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊரக மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

2018இல் ஐஎஸ்கே பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். இதில் 75 சதவீத உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தன.

ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் ஐஎஸ்கே தாக்குதல் நடத்தியது. 2018இல் அந்த இயக்கம் நடத்திய 125 தாக்குதல்களில் 36 சதவீதம் தற்கொலைப் படைத் தாக்குதல்கள்.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் உலகில் முதல் நான்கு கொடூரமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக ஐஎஸ்கே மாறியது.

2016ஆம் ஆண்டு இந்த இயக்கத்தில் சுமார் 4000 பேர் இருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஆப்கான் அரசாங்கப் படையின் நடவடிக்கையால் 2018இல் சுமார் 600 முதல் 800 பேராக குறைந்தனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறிய ஒகஸ்ட் இறுதி நிலவரப்படி ஐஎஸ்கேயில் சுமார் 2,000 பேர் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: ஆப்கானிஸ்தான்ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்புதலிபான்தெற்காசியாவடகிழக்குவடக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நல்லெண்ண விஜயமாக இந்திய இராணுவப் படைகளின் பிரதானி இலங்கை வந்தடைந்தார்

Next Post

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

Related Posts

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

2026-01-30
ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்
இந்தியா

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

2026-01-30
Next Post
ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே!

ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவிப்பு

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல - அரசாங்கம்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.