வடமேற்கு லண்டனில் உள்ள முன்பள்ளி ஒன்றில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான விவகாரத்தில், அங்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உள்ளூர் கவுன்சில் மறுப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் நீதிமன்ற மறுஆய்வை நோக்கி நகர்ந்துள்ளனர்.
லண்டனின் வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் பகுதியில் உள்ள பிரபல முன்பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வின்சென்ட் சான் (45) என்பவருக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மீதான 56 பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கேம்டன் கவுன்சில் முறையான விசாரணையை நடத்தத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் கவுன்சிலுக்கு சட்டப்பூர்வ அறிவித்தல் அனுப்பியுள்ளன.
இதேவேளை, குறித்த விவகாரத்தில் முன்பள்ளியின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து முறையான விசாரணை கோரியே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.















