இங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய புதிய திட்டம் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மாற்றுத்திறனாளி பேருந்து அட்டைகள் வாரநாட்களில் காலை 9:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இதனால் வேலைக்குச் செல்வோரும், அவசர தேவைகளுக்காகப் பயணிக்கியோரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
சுமார்ஒரு மில்லியன் மக்கள் பயனடையும் இத்திட்டத்திற்கு 60 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.















