• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இஸ்லாமிய நாட்காட்டியின் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா இன்றாகும். 

சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும்.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, எல்லையற்ற பொறுமை மற்றும் கருணையின் வழியை வெளிப்படுத்திய முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அன்று முதல் இன்று வரை தோன்றிய மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவராவார். 

23 ஆண்டுகள் அவர் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்கள் மற்றும் செய்த இணையற்ற தியாகங்களின் நோக்கம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலைகொண்ட ஒரு நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அன்னார், முழு மனிதகுலமும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியது என்பதையும், உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னத நற்பண்புகளால் மட்டுமே மேன்மையை அளவிட முடியும் என்பதையும் உணர்த்தினார். 

சமூகத்தில் உள்ள பணக்கார-ஏழை இடைவெளியை அகற்றி, ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய அடித்தளத்தை அமைத்தார். 

சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதிமிக்க மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும் சகவாழ்வுடனான சமூகத்தையும் உருவாக்கும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான வழிகாட்டுதல் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் ஏராளமாக காணப்படுகின்றன.

மனிதர்களின் உளத் தூய்மையையும், சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் அனைத்துக் தீமைகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. எனவே, நமது தாய்நாட்டில்  பேரழிவாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய செயற்பாடுகளைப் போன்ற, சமூக ஒழுக்கத்தை உயர்த்துவதற்கான திட்டங்களுக்கு நபிகளார் போதித்த இஸ்லாம் மார்க்கமும் அவரின் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் பலத்தை அளிக்கின்றன.

உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிணக்கிற்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகள் (ஸல்) அவர்களினால் போதிக்கப்பட்ட இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்த பாதையைப் பிரகாசமாக்கும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும்.

நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள் உரித்தாகட்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

May be an image of text that says "இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லீம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்! ပြဲ ලාංකික මෙන්ම ලෝකවාසී සමස්ත ඉස්ලාම් බැතිමතුන්ට අර්ථවත් ಳ- මිලාද්-උන්-නබි නඹි උත්සවයක් වේවා! May Milad-un-Nabi be meaningful celebration for all Muslim devotees in Sri Lanka and across the world! 2026.08.26 PMD ජනාධිපති මාධ්‍ය අංශය ஜனாதிபதி ஜனா ஊடகம் பிரிவு PRESIDENTS MEDIADIVISION MEDIA DIVISION"

Related

Tags: anura kumara dissanayakeMilad-un-Nabi'அநுர குமார திஸாநாயக்கமீலாதுன் நபி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Next Post

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

Related Posts

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!
இலங்கை

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

2026-08-26
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-26
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!
இலங்கை

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!
இலங்கை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
Next Post
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

0
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

2026-08-26
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

2026-08-26
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-26
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.