மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் வென்று உக்கிரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் லிட்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்த்து எலினா ஸ்விடோலினா களமிறங்கினார்.
போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய எலினா ஸ்விடோலினா 6-3 , 6-2 என்ற நேர் செட்டில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் நாளைய தினம் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டியை எதிர்கொள்ளவுள்ளார்.
இதேவேளை இன்று நடைபெறவுள்ள மற்றுமொரு காலிறுதி போட்டியில் மரியா சக்கரியும் உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் பலப்பரிட்சை நடத்தவுள்ளனர்.