ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் குறித்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒக்சிஜன் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு மத்திய அரச அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே இது குறித்து ஆலோனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.