இங்கிலாந்தில் 32 மற்றும் 33 வயதுடையவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
சனிக்கிழமை 07:00 மணிக்கு 32 மற்றும் 33 வயதுடைய சுமார் ஒரு மில்லியன் பேருக்கு முன்பதிவு திறக்கப்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறுஞ்செய்தி அழைப்பிதழ்கள் சனிக்கிழமையன்று 33 வயதுடையவர்களுக்கும், திங்களன்று 32 வயது இளைஞர்களுக்கும் அனுப்பப்படும்.
இங்கிலாந்தில் 37.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர். மேலும் 21.6 மில்லியன் பேருக்கு இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளது.