தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமான முறையில் ஒரே இடத்தில் ஒன்றுகூட வேண்டாம் என வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு செயற்பட்டால் ஆபத்தான நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலம் தடுப்பூசி கிடைத்தவுடன் சகல பகுதிகளுக்கும் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வழங்கியுள்ள சில சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.