கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ். கைத்தடி, பொரளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளும் இவற்றில் அடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய 24 ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படுகின்ற வைத்தியசாலைகளாகும்.