கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வை நடத்துவதா? என்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
மேலும் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படும் பட்சத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் கட்டளை சட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.