நேபாளத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கின் படி, மொத்தமாக ஏழு இலட்சத்து 97பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 40ஆவது நாடாக விளங்கும் நேபாளத்தில் இதுவரை ஏழு இலட்சத்து 48ஆயிரத்து 981பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பத்தாயிரத்து 533பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 548பேர் பாதிக்கப்பட்டதோடு 24பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38ஆயிரத்து 351பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.