ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 37இலட்சத்து இரண்டாயிரத்து 100பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 38இலட்சத்து 81ஆயிரத்து 579பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 497பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 555பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 86ஆயிரத்து 982பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 775பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



















