ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 60இலட்சத்தை நெருங்குகின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 59இலட்சத்து 96ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் ஈரானில் இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 439பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 341பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 140பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து 53ஆயிரத்து 256பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 669பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 56இலட்சத்து 15ஆயிரத்து 460பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.