ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் கொவிட் தொற்றினால் எட்டு இலட்சத்து நான்காயிரத்து மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை எட்டு இலட்சத்து 92ஆயிரத்து 65பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11,515பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 178பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 76ஆயிரத்து 547பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 377பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.