• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதல்முறையாக ரி-20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து!

முதல்முறையாக ரி-20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து!

Anoj by Anoj
2021/11/11
in கிரிக்கெட், விளையாட்டு
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக நியூஸிலாந்து அணி, ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அத்துடன் கேன் வில்லியம்சன் தலைமையில் தொடர்ச்சியாக 50 ஓவர்கள் உலகக்கிண்ணம், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ரி-20 உலகக்கிண்ணம் என மூன்று தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இந்தியாவை வீழ்த்தி ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்றது.

அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி தனது முதலாவது ரி-20 உலகக்கிண்ண தொடரின் அரைசதத்தை பதிவுசெய்தார். அவர் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும், டாவிட் மாலன் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ, ஆடம் மில்ன், இஷ் சோதி மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேரில் மிட்செல் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் டேவோன் கோன்வே 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அடில் ராஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டேரில் மிட்செல் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அரையிறுதிப் போட்டிஇங்கிலாந்து அணிடேரில் மிட்செல்நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிரி-20 உலகக்கிண்ண தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முடக்கமே தீர்வாக அமைய வாய்ப்பு – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Next Post

மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

2026-03-16
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
Next Post
மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

மழையுடனான வானிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

அர்ஜெண்டீனாவில் கொவிட் தொற்றினால் 53இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அர்ஜெண்டீனாவில் கொவிட் தொற்றினால் 53இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வவுனியாவில் பொதுமக்கள் பயன்படுத்தாத வீதிகள் புனரமைப்பு!  மக்கள்  ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் பொதுமக்கள் பயன்படுத்தாத வீதிகள் புனரமைப்பு! மக்கள் ஆர்ப்பாட்டம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

0
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

0
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17

Recent News

ஜனாதிபதியின் விசேட ஊடக சந்திப்பு

2026-03-17
அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு!

2026-03-17
முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

முச்சக்கரவண்டியொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

2026-03-17
ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

ஹோர்முஸ் விவகாரம் : எவரின் உதவியும் தேவையில்லை – ட்ரம்ப்

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.