இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடவுள்ளதுடன், விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட சில சிரேஷ்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தத் தொடரில் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக டிம் சவுதி நியூஸிலாந்து அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.