இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், ஜெய்டன் சீல்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், வீராசாமி பெருமாள் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
கடந்த 8ஆம் திகதி ஆன்டிகுவாவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 140 ஓட்டங்களையும் போக்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும் கெமார் ரோச், ஜேஸன் ஹோல்டர் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ஓட்டங்களை பெற்றது.
இன்னமும் ஒரு விக்கெட் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை இன்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரவுள்ளது.