மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இருவரும் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடியதால், இரண்டு செட்டுகளுமே டை பிரேக் வரை நீடித்தன.
இதில் இறுதிவரை ஆக்ரோஷம் கலந்த நிதானத்துடன் விளையாடிய அல்கராஸ் கார்ஃபியா, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, நோர்வேயின் காஸ்பர் ரூட்டுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.