தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், கெய்ல் வெர்னைன் 10 ஓட்டங்களுடனும் வியான் முல்டர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
போர்ட் எலிசெபத் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது டீன் எல்கர் 70 ஓட்டங்களுடனும் சரேல் எர்வீ 24 ஓட்டங்களுடனும் கீகன் பீட்டர்சன் 64 ஓட்டங்களுடனும் டெம்பா பவுமா 67 ஓட்டங்களுடனும் ரியான் ரிக்கல்டன் 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் காலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா அணி இன்று தொடரவுள்ளது.